பிரபல நடிகர் படத்தில் இணைந்த நடிகை வரலட்சுமி….
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 61வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்க உள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது வேறு முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed